கோப்புப்படம் 
இந்தியா

நேரு குடும்பம் கொடுத்த அங்கீகாரத்தை ஜிதின் மறக்கக் கூடாது: டி.கே. சிவகுமார்

​காங்கிரஸ் கட்சியும், நேரு குடும்பமும் கொடுத்த அங்கீகாரத்தை ஜிதின் பிரசாதா மறக்கக் கூடாது என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

DIN


காங்கிரஸ் கட்சியும், நேரு குடும்பமும் கொடுத்த அங்கீகாரத்தை ஜிதின் பிரசாதா மறக்கக் கூடாது என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிரசாதா தில்லியில் பாஜக தலைமையகத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அனில் பலுனி முன்னிலையில் புதன்கிழமை அக்கட்சியில் இணைந்தார். உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் அவர் பாஜகவில் இணைந்திருப்பது காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

ஜிதினி பிரசாதா பாஜகவில் இணைந்தது பற்றி கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்தது:

"ஜிதின் பிரசாதாவுக்கு அங்கீகாரம் கொடுத்தது காங்கிரஸ் கட்சியும், நேரு குடும்பமும்தான். அவர் அதை மறக்கக் கூடாது. நானும் மறக்கக் கூடாது."

கர்நாடக காங்கிரஸில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவகுமாருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ஜிதின் பிரசாதா குறித்து கருத்து தெரிவிக்கையில் சிவகுமார் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT