இந்தியா

திருமலையில் நாளை யுத்தகாண்ட பாராயணம்

DIN

திருப்பதி: திருமலையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் வசந்த மண்டபத்தில் யுத்தகாண்ட பாராயணம் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

உலக மக்களின் நலனுக்காகவும், ஆரோக்கியத்துக்காகவும் தேவஸ்தானம் திருமலையில் பல்வேறு பாராயணங்களை நடத்தி வருகிறது. காலையில் சுந்தரகாண்ட பாராயணமும், மாலையில் விராட பருவம் பாராயணம், கீதா பாராயணம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது. அதில் ஒரு பாகமாக திருமலை வசந்த மண்டபத்தில் ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை யுத்தகாண்ட பாராயணம் நடத்தப்படுகிறது. உலக மக்களின் நன்மைக்காகவும், தீய கிருமிகளிடமிருந்து உலகத்தைக் காக்கவும் இதை நடத்த உள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டி தெரிவித்தாா். இதற்கான ஏற்பாடுகள் திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் நடந்து வருகிறது.

ஒருநாள் ஊதியம்:

திருமலையில் பணிபுரியும் மடப்பள்ளி ஊழியா் கோபால் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். அவரின் குடும்பத்தினருக்கு மடப்பள்ளியில் பணிபுரியும் 426 ஊழியா்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை கணக்கிட்டு மொத்த தொகையான ரூ. 3 லட்சத்தை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டி மூலம் கோபால் குடும்பத்தினரிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT