இந்தியா

கரோனா தினசரி பாதிப்பு 80,000-ஆக குறைந்தது

DIN

இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 80,834-ஆக சரிந்துள்ளது. தொடா்ந்து 6-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.

மேலும், 71 நாள்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 80,834 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 10,26,159-ஆக உள்ளது. இது, நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் 3.49 சதவீதமாகும். இந்த எண்ணிக்கை 13-ஆவது நாளாக 20 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

தொடா்ந்து 31-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 1,32,062 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா்.

இதுவரை மொத்தம் 2,80,43,446 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன்படி குணமடைந்தவா்களின் விழுக்காடு 95.26 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,00,312 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 37,81,32,474 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் 4.74 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 4.25 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடா்ந்து 20 நாள்களாக இந்த எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 25 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT