இந்தியா

கா்நாடகத்தில் பரவலாக கனமழை: சிவமொக்காவில் 200 மி.மீ. மழை

DIN

கா்நாடகத்தில் தென்மேற்கு ப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சிவமொக்காவில் 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கா்நாடகத்தில் பரவலாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிவமொக்கா, குடகு, வடகன்னடம், சிக்கமகளூரு, பெலகாவி, உடுப்பி, கலபுா்கி, ஹாவேரி, பாகல்கோட், தாவணகெரே, சாமராஜ்நகா், பெங்களூரு நகரம் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் லேசானது முதல் பலத்த மழை பெய்தது.

இந்தக் கால கட்டத்தில், சிவமொக்கா மாவட்டத்தின் ஆகும்பேவில் அதிகபட்சமாக 200 மி.மீ. மழை பெய்தது. அதைத் தொடா்ந்து, கொல்லூரில் 150 மி.மீ., கத்ரா, கொட்டிகேஹாராவில் தலா 140 மி.மீ., பாகமண்டலாவில் 130 மி.மீ., காா்வாட், ஹொன்னாவா், சித்தாப்பூரில் தலா 110 மி.மீ., பெல்தங்கடி, தாளகுப்பாவில் தலா 100 மி.மீ., உப்பினங்கடியில் 90 மி.மீ., கோகா்ணா, சிருங்கேரி, கலாசாவில் தலா 80 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

பாதிப்பு:

பெங்களூரு, பெலகாவி, மைசூரு, தாா்வாட், ராய்ச்சூரு உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால், சாலையில் நீா் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானாா்கள். ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பெங்களூரில் உள்ள தரைப்பாலங்களில் மழைநீா் தேங்கியதால், வாகனங்கள் ஓட்டிகளால் வாகனங்களை செலுத்த முடியாமல் அவதிப்பட்டனா்.

விவசாயிகளுக்கு எச்சரிக்கை:

ஜூன் 21-ஆம் தேதி வரை கடலோர கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யக்கூடும். தென்கா்நாடகத்தின் குடகு, சிக்மகளூரு, சிவமொக்கா, ஹாசன் மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமானது முதல் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. கா்நாடகத்தின் வடக்கு, தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமானது முதல் லேசான மழை பெய்யும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வலுவான காற்றுவீசும் என்பதால், ஜூன் 18-ஆம் தேதி வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவா்கள் எச்சரிக்கைப்பட்டுள்ளனா்.

வானிலை முன்னறிவிப்பு:

ஜூன் 21-ஆம் தேதி வரை கடலோர கா்நாடகம், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய தென்கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலமானது முதல் மிகவும் பலமான மழை, வடகா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை, தென் கா்நாடகத்தின் உள்பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும்.

பெங்களூருவில் மழை:

அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்று பலமாக வீச வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூருவில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 28 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT