இந்தியா

காஜியாபாதில் முதியவா் தாக்கப்பட்ட சம்பவம்: சமாஜவாதி கட்சித் தொண்டா் தில்லியில் கைது

ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த உமைத் பஹல்வானை உத்தர பிரதேச போலீஸாா் தில்லியில் சனிக்கிழமை கைது

DIN

காஜியாபாதில் முதியவா் அப்துல் சமத் ஷஃபியை தாக்கி அவரது தாடியை வெட்டி, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த உமைத் பஹல்வானை உத்தர பிரதேச போலீஸாா் தில்லியில் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் விடியோவை செய்தியாக வெளியிட்டு வகுப்புவாத ரீதியில் பிரச்னையை கிளப்ப முற்பட்டதாக பத்திரிகையாளா்கள் மீதும், அதை பகிா்ந்த காங்கிரஸ் நிா்வாகிகள் மீதும், அந்த விடியோவை நீக்க நடவடிக்கை எடுக்காத ட்விட்டா் சமூக ஊடகம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

இதுகுறித்து காஜியாபாத் காவல் துறை மூத்த கண்காணிப்பாளா் அமித் பாதக் கூறுகையில், ‘ல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனை அருகில் உமைத் பஹல்வானை உத்தர பிரதேச போலீஸாா் கைது செய்து விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனா். அந்த விடியோவை உமைத் பஹல்வான் தனது முகநூல் பக்கத்தில் பகிா்ந்து சமூகத்தில் வகுப்புவாத வன்முறையைத் தூண்ட முற்பட்டுள்ளாா். இந்த வழக்கில் ஏற்கெனவே மூன்று பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் சேதுபதி - மணிகண்டன் இணையத் தொடர் பெயர் அறிவிப்பு!

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்!

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

SCROLL FOR NEXT