மூன்றாம் அலை? கம்மம் பகுதியில் 21 நாள்களில் 1,400 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு 
இந்தியா

மூன்றாம் அலை? கம்மம் பகுதியில் 21 நாள்களில் 1,400 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு

கரோனா மூன்றும் அலை அதிகளவில் குழந்தைகளைத் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலைடியில், அது கம்மம் பகுதியில் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ENS


கம்மம்: கரோனா மூன்றும் அலை அதிகளவில் குழந்தைகளைத் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலைடியில், அது கம்மம் பகுதியில் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் சமீப நாள்களாக 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் 800 குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் இது கடந்த ஜூன் மாதத்தில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 21ஆம் தேதி வரை மட்டும் ஜூன் மாதத்தில் 1,480 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று சுகாதாரப் பணியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான மற்றும் மிதமான அறிகுறிகளே இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

லேசான அறிகுறிகளுடன் கரோனா உறுதி செய்யப்பட்ட குழந்தைகள், அங்கு புதிதாகத் திறக்கப்பட்ட குழந்தைகளுக்கான கரோனா மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT