புதுச்சேரி அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு 
இந்தியா

புதுச்சேரி அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய அமைச்சர்கள் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

DIN


புதுச்சேரி சட்டப்பேரவையில் பொறுப்பேற்கவுள்ள புதிய அமைச்சர்களின் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 15-ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிந்து என்.ஆர். காங்கிரஸ்-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி முதல்வராகவும், பாஜக பொதுச்செயலர் ஆர். செல்வம் சட்டப்பேரவைத் தலைவராகவும், பொறுப்பேற்று பணியாற்றி வருகின்றனர்.

இதனை அடுத்து நீண்ட இழுபறிக்குப் பின்னர், என். ஆர். காங்கிரஸ், பாஜக இடையே அமைச்சரவை பதவிகளுக்கான பங்கீடு முடிந்து, அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம், எம்எல்ஏ சாய் சரவணன், என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், காரைக்காலை சேர்ந்த சந்திரபிரியங்கா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) மாலை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT