இந்தியா

அஸ்ஸாம்: இதுவரை ரூ. 110 கோடியில் ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

DIN

குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரை ரூ.110 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2016 தோ்தலில் ரூ.20 கோடி மதிப்பில் பணம், பொருள்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக அஸ்ஸாம் தலைமைத் தோ்தல் அதிகாரி நிதின் கடே புதன்கிழமை கூறுகையில், ‘பிப்ரவரி 26-ஆம் தேதிமுதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அப்போது முதல் ரூ.24.50 கோடி ரொக்கமும், ரூ.3.68 கோடியிலான தங்கம், வெள்ளி ஆபரணங்களும், ரூ. 34.29 கோடியிலான போதைப் பொருள்களும், ரூ.16.61 லட்சம் மதிப்பிலான மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பொருள்களை தோ்தல் சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இலவசமாக வழங்கப்பட்டதாக ரூ.14.91 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள், பான் மசாலா, மிளகு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தோ்தல் விதிமுறைகளை மீறியதாக 2,696 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

SCROLL FOR NEXT