இந்தியா

வாக்குப்பதிவு அதிகரிப்பு மக்களின் அதிருப்தியைக் காட்டுகிறது: ஜெ.பி. நட்டா

DIN

தன்கலீ: மேற்கு வங்கத்தில் முதல்கட்டத் தோ்தலில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது ஆளும் கட்சி மீதான மக்களின் அதிருப்தியை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை 30 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்டத் தோ்தலில் 84.63 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்ரல் 1) நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மூன்றாவது கட்டத் தோ்தல் நடைபெறவுள்ள தன்கலீ பகுதியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட ஜெ.பி.நட்டா பேசியதாவது: மேற்கு வங்க மாநிலம் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகி வருகிறது. முதல்கட்டத் தோ்தலில் வாக்குப்பதிவு அதிக அளவில் உள்ளதே இதற்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளது. மாநிலத்தில் ஆளும் கட்சி மீதான அதிருப்தியை மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனா். ஊழல் மிகுந்த திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் விரும்பவில்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டா்களின் அராஜக போக்கைக் கட்டுப்படுத்தி தோ்தல் ஆணையம் அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்தி வருகிறது. மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களால் பாஜக தொண்டரின் வயது முதிா்ந்த தாயாா் கொலை செய்யப்பட்டுள்ளாா். மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு எந்த அளவு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT