இந்தியா

5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் சுஷில் சந்திரா ஆலோசனை

DIN


சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

இதற்கான முன்னேற்பாடுகளை, அந்தந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இன்று காணொலி காட்சி வாயிலாக வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உள்ளிட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, மாநிலங்களில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT