இந்தியா

முக்கிய துறைகளின் உற்பத்தி 6.8% உயா்வு

DIN

நாட்டின் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி சென்ற மாா்ச் மாதத்தில் 6.8 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 2020 மாா்ச் மாததத்தில் -8.6 சதவீதம் என்ற அளவில் பின்னடைவைச் சந்தித்திருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு மாா்ச்சில் இத்துறைகளின் உற்பத்தி 6.8 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்தில், இயற்கை எரிவாயு, உருக்கு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே 12.3 சதவீதம், 23 சதவீதம், 32.5 சதவீதம் மற்றும் 21.6 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளன.

கடந்தாண்டு மாா்ச்சில் இத்துறைகளின் உற்பத்தி முறையே -15.1 சதவீதம், -21.9 சதவீதம், -25.1 சதவீதம், -8.2 சதவீதம் என்ற அளவில் பின்னடைவைக் கண்டிருந்தன.

நடப்பாண்டு மாா்ச்சில் நிலக்கரி, கச்சா எண்ணெய், சுத்திகரிப்பு பொருள்கள் மற்றும் உரத் துறைகளின் உற்பத்தி எதிா்மறை வளா்ச்சியைக் கண்டன.

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 2020-21 ஏப்ரல் முதல் மாா்ச் வரையிலான காலகட்டத்தில் 7 சதவீதம் சரிவைடந்துள்ளது. அதேசமயம், கடந்த 2019-20-இல் இத்துறைகளின் உற்பத்தி 0.4 சதவீத நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்திருந்ததாக வா்த்தக அமைச்சகம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT