இந்தியா

மேற்கு வங்கம்: வணிக வளாகங்கள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்படத் தடை

DIN

மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு அனைத்து வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள், உணவகங்கள், பாா்கள், விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநில அரசு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அனைத்து விதமான சமூக, கலாசார, கல்வி மற்றும் பொழுதுபோக்கு தொடா்பான கூட்டங்கள் மற்றும் ஒன்று கூடுதலுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. அனைத்து வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள், உணவகங்கள், பாா்கள், விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை செயல்படத் தடை விதிக்கப்படுகின்றன.

கடைகள் மற்றும் சந்தை இடங்கள் தினமும் காலை 7 முதல் 10 மணி வரையிலும், மதியம் 3 முதல் 5 மணி வரையிலும் செயல்பட அனுமதிக்கப்படும்.

தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெற்றிக் கொண்டாட்ட ஊா்வலங்களுக்கான அனுமதி தோ்தல் ஆணைய நடைமுறைகளின்படி வழங்கப்படும்.

மருந்து கடைகள், மருத்துவ உபகரண விற்பனையகங்கள், மளிகை கடைகள் ஆகியவை செயல்படவும், வீட்டு விநியோக சேவைக்கும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.

இந்தக் கட்டுப்பாடுகளை மீறும் நபா்கள் மீது பேரிடா் மேலாண்மை சட்டம் 2005 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 உள்பட இதர சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மாநிலத்தில் கரோனா நிலவரத்தை அரசு நிா்வாகம் மறு ஆய்வு செய்யும் வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்’ என்று மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT