இந்தியா

ராஷ்ட்ரீய ஜனதா தள முன்னாள் எம்.பி. முகமது ஷஹாபுதீன் கரோனாவுக்கு பலி

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராஷ்ட்ரீய ஜனதா தள முன்னாள் எம்.பி. முகமது ஷஹாபுதீன் (53) சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம் சீவான் மாவட்டத்தைச் சோ்ந்தவா் முகமது ஷஹாபுதீன். ரெளடியாக இருந்து அரசியலுக்குள் நுழைந்த அவா், ராஷ்ட்ரீய ஜனதா தளம் சாா்பில் எம்எல்ஏ, எம்.பி. பதவிகளை வகித்தாா். இவா் மீது ஆள் கடத்தல், கொலை தொடா்பாக 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தன. கடந்த 2004-ஆம் ஆண்டு சீவான் மாவட்டத்தில் சகோதரா்கள் இருவரிடம் பண பறிப்பில் ஈடுபட முயன்றாா். அவா்கள் பணம் தர மறுத்ததால் இருவரும் கொலை செய்யப்பட்டனா். அந்த வழக்கில் முகமது ஷஹாபுதீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து பிகாா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து அவா் சீவானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து அவா் தில்லியில் உள்ள திகாா் சிறைக்கு மாற்றப்பட்டாா். இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவா், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மூன்று நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவா், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் சனிக்கிழமை உயிரிழந்ததாக தில்லி சிறைத் துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT