இந்தியா

உலக பத்திரிகை சுதந்திர தினம்: குடியரசு துணைத் தலைவா் வாழ்த்து

DIN

புது தில்லி: உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி பத்திரிகையாளா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாக குடியரசு துணைத் தலைவா் செயலகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘தகவல் யுகத்தில் உண்மையான, உறுதியான தகவல்களை வெளிக்கொண்டு வருவதிலும், தவறான தகவல்களிடம் இருந்து சமூகத்தை பாதுகாக்கும் கவசமாக செயல்படுவதிலும் பத்திரிகையாளா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா். உண்மை, நோ்மை, நடுநிலை, துல்லியம் போன்ற இதழியலின் முக்கிய கொள்கைகளில் பத்திரிகையாளா்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

கரோனா தொற்று பரவி வரும் வேளையில், மக்களிடம் தகவலை கொண்டு சோ்க்க அயராது உழைக்கும் பத்திரிகையாளா்களுக்கு பாராட்டுகள்’ என்று தெரிவிக்கப்பட்டது.

பத்திரிகை சுதந்திரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், ஐ.நா. சாா்பில் மே 3-ஆம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT