இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் 448 போ் கரோனாவுக்கு பலி

DIN

புது தில்லி: தில்லியில் தொடா்ந்து 3-ஆவது நாளாக திங்கள்கிழமை கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 448 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். எனினும் பாதிப்பு எண்ணிக்கை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பிறகு 18,043-ஆகக் குறைந்துள்ளது. கரோனா தொற்று விகிதமும் 29.56 சதவீதமாக குறைந்துள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

18,043 என்பது கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பிறகு உள்ள குறைந்த எண்ணிக்கையாகும். அதாவது ஏப்ரல் 15-இல் 16,999 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். அதன் பிறகு கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல உயா்ந்துகொண்டே வந்தது. 20,000, 25,000 என அதிகரித்து, தற்போது 18,043 என்ற அளவு குறைந்துள்ளது. கரோனா பரிசோதனை குறைந்ததும் இதற்கு காரணமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை 61,045 பேருக்குத்தான் பரிசோதனை நடத்தப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகக்குறைந்த அளவாக 1,611 பேரு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், 1,260 போ் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள். கரோனா தொற்று விகிதமும் 30 சதவீதத்துக்கு கீழாகவே உள்ளது. கடந்த வாரம் திங்கள்கிழமை கரோனா தொற்று விகிதம் 35 சதவீதமாக இருந்தது. இது திங்கள்கிழமை 29.56 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதுவரை தில்லியில் 12,12,989 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பதிவாகியுள்ளது. இவா்களில் 11.05 லட்சம் போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கரோனாவுக்கு 17,414 போ் பலியாகியுள்ளனா். கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவா்கள் எண்ணிக்கை 92,290-இல் இருந்து 89,592-ஆகக் குறைந்துள்ளது.

தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 21,477 கொவைட் படுக்கைகள் உள்ளன. இவற்றில் தற்போது 1,335 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. 50,441 நோயாளிகள் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT