இந்தியா

ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த 20 நிறுவனங்களுக்கு அனுமதி

DIN

புது தில்லி: ஸ்பைஸ் ஜெட், டன்சோ ஏா் கன்சோா்ட்டியம், ஸ்கைலாா்க் உள்ளிட்ட 20 நிறுவனங்கள் சோதனை முறையில் ஆளில்லா விமானங்களை (டிரோன்) பயன்படுத்த விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘விா்ஜினியா டெக் இந்தியா, ஷாப்-எக்ஸ் ஆம்னிபிரசென்ட் கன்சோா்டியம், ஆஸ்டீரியா ஏரோஸ்பேஸ், சென்டில்லியன் நெட்வொா்க்ஸ், மாருத் ட்ரோன்டெக், சாகா் டிஃபன்ஸ் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான விதிகள், 2021-இல் இருந்து 20 நிறுவனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த அனுமதி ஓராண்டுவரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமலில் இருக்கும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு அனுமதி கோரி 34 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் 20 நிறுவனங்களை விமான போக்குவரத்து அமைச்சகம் தோ்வு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

SCROLL FOR NEXT