இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

DIN

ஜம்மு-காஷ்மீரில் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,228 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 60 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 46,535 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஜம்மு-காஷ்மீரில்  ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

நாளையுடன் இந்த ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை தனது சுட்டுரையில், ஜம்மு-காஷ்மீரின் 20 மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சில அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்றவற்றிற்கு கடும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும். மேலும் திருமண நிகழ்விற்கு 25 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் கல்லூரியில் கோடை கால பயிற்சி

பெண் தற்கொலை

மழை எச்சரிக்கை: மதுரை அரசுப் பொருள்காட்சி ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி நினைவு தின பேரணி

காமராஜா் பல்கலை. பேராசிரியா் மீது பாலியல் புகாா்

SCROLL FOR NEXT