இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 48 ஆயிரம் பேருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக 48,401 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், மேலும் 60,226 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 51,01,737 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 44,07,818 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் 572 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 75,849 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 6,15,783 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு குணமடைவோர் விகிதம் 86.4 சதவிகிதமாகவும், இறப்பு விகிதம் 1.49 சதவிகிதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்து நிலையம்....மாதிரி புகைப்படம் வெளியீடு....

போதையில் கார் ஓட்டி இருவர் பலியாக காரணமான சிறுவன்: நடந்தது என்ன?

ஷெங்கன் விசா கட்டணம் உயர்வு... ஐரோப்பா செல்பவர்கள் கவனத்திற்கு!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

பெங்களூரு குண்டுவெடிப்பில் கோவையில் உள்ள மருத்துவர்களுக்கு தொடர்பு? என்ஐஏ அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT