‘கரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு தேவை’: தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தல் 
இந்தியா

‘கரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு தேவை’: தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தல்

கரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார்.

DIN

கரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார்.

தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக 43 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு  கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் மீதான வரி குறித்து விவாதிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் கரோனா தடுப்பூசிகள், ரெம்டெசிவர் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட  வேண்டும் வலியுறுத்தினார். 

மேலும் 2021-22 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும் எனவும் மாநிலங்கள் இல்லாமல் ஒன்றிய அரசு இல்லை என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர் ஜிஎஸ்டி முறையை முழுவதுமாக மாற்றியமைப்பதற்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அங்கன்வாடி ஊழியா்களை ஏமாற்றியது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT