பிகாரில் கரோனா பாதித்த குழந்தை உள்பட 4 குழந்தைள் பலி 
இந்தியா

பிகாரில் கரோனா பாதித்த குழந்தை உள்பட 4 குழந்தைள் பலி

பிகார் மாநிலம் தர்பாங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த ஒரு சில நாள்களில் கரோனா பாதித்த குழந்தை உள்பட 4 குழந்தைகள் பலியாகியுள்ளன.

ANI


தர்பாங்கா: பிகார் மாநிலம் தர்பாங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த ஒரு சில நாள்களில் கரோனா பாதித்த குழந்தை உள்பட 4 குழந்தைகள் பலியாகியுள்ளன.

நான்கு குழந்தைகளுமே மூச்சு விடுவதில் சிரமத்துடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும், நிமோனியா அறிகுறிகள் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு ஏற்கனவே பல உடல்நலப் பாதிப்புகள் இருந்தன. அதில் ஒரு குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மூன்று குழந்தைகளுக்கும் கரோனா இல்லை என்று பரிசோதனையில் கூறப்பட்டுள்ளது.

கரோனா உறுதி செய்யப்பட்ட குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. உடனடியாக ஐசியூவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.  எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தது. 

மேலும், சகோதரிகளான மூன்று குழந்தைகள் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு குழந்தைகள் மே 29-ம் தேதியும், ஒரு குழந்தை மே 30ம் தேதியும் உயிரிழந்தனர். 3 குழந்தைகளும் சத்துக் குறைபாட்டுடன் நிமோனியா பாதித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT