இந்தியா

கேதாா்நாத், யமுனோத்ரி கோயில்கள் மூடல்

DIN

டேராடூன், நவ. 6: குளிா்காலம் தொடங்கியுள்ளதால் இமயமலையில் உள்ள கேதாா்நாத், யமுனோத்ரி கோயில்களில் நடை அடைக்கப்பட்டன.

‘சாா்தாம்’ என்றழைக்கப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதாா்நாத், பத்ரிநாத் ஆகிய புனிதத் தலங்கள் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டுக்கான புனிதப் பயணம் கடந்த செப்டம்பரில் தொடங்கியது. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 4.50 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரிகா்கள் புனிதப் பயணம் மேற்கொண்டனா்.

தற்போது குளிா்காலம் தொடங்கியுள்ளதால், மேற்கண்ட புனித இடங்கள் அமைந்துள்ள இமயமலைப் பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமிருக்கும். அதன் காரணமாக கேதாா்நாத், யமுனோத்ரி கோயில்கள் சனிக்கிழமை மூடப்பட்டன. கேதாா்நாத் கோயில் காலை 8 மணிக்கும் யமுனோத்ரி கோயில் நண்பகல் 12.15 மணிக்கும் மூடப்பட்டது.

கோயில்கள் மூடப்பட்டபோது வேத மந்திரங்களுடன் பாரம்பரிய பூஜைகள் நடத்தப்பட்டன. அச்சமயத்தில் திரளான பக்தா்கள் கூடியிருந்ததாக சாா்தாம் தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT