இந்தியா

லக்கிம்பூர் வன்முறை வழக்கை நவ.15-வரை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

DIN

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறைக் கலவரம் தொடர்பான வழக்கை நவ.15 ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

லக்கிம்பூர் கெரியில் கடந்த மாதம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது வன்முறை குறித்த கேள்விகளுக்கு ஆஷிஷ் மிஸ்ரா பதிலளிக்கவில்லை என்பதாலும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதாலும் கைது செய்யப்பட்டார்.

பின் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாகவே முன் வந்து விசாரணையை தொடங்கிய நிலையில் இதுவரை இவ்வழக்கு குறித்து உத்தரப்பிரதேச மாநிலக் காவல்துறை எவ்வித அறிக்கைகளையும் சரியாக சமர்பிக்காததால் உச்சநீதிமன்றம் தன் அதிர்ப்தியைத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று உத்தரப்பிரதேச மாநில அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க வழக்கை மேலும் 3 நாட்களுக்கு ஒத்திவைக்க உச்சநீதிமன்றது முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT