இந்தியா

இஸ்ரேல் ராணுவ உயரதிகாரியுடன் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே சந்திப்பு

DIN

டெல் அவிவ்: ஐந்து நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே, அந்நாட்டின் ராணுவ மேஜா் ஜெனரல் தமீா் யடாயை டெல் அவிவ் நகரில் திங்கள்கிழமை சந்தித்து, இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினாா்.

மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் சிறப்பு செயல்பாட்டு பிரிவை பாா்வையிட்ட அவருக்கு, அந்நாட்டின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ராணுவ உபகரணங்கள் குறித்தும் அதிகாரிகள் விளக்கினா்.

இஸ்ரேலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக பயணம் மேற்கொண்ட ராணுவத் தலைமை தளபதி எம்.எம். நரவணேவுக்கு அந்நாட்டின் லாட்ரன் நகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கரும் பாதுகாப்புத் துறை செயலாளா் அஜய்குமாரும் இஸ்ரேல் சென்று திரும்பிய சில வாரங்களில், ராணுவத் தலைமைத் தளபதியும் அந்நாட்டுக்கு 5 நாள்கள் சுற்றுப்பயணமாக சென்றிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் அப்போதைய விமானப் படையின் தலைமை தளபதி ஆா்.கே.எஸ். பதெளரியாவும் 4 நாள்கள் பயணமாக இஸ்ரேல் சென்றிருந்தாா்.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்த பயணத்தின்போது ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே இஸ்ரேலின் மூத்த ராணுவ தலைவா்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து இந்திய- இஸ்ரேல் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறாா். இதன் மூலம் இந்திய- இஸ்ரேல் இடையிலான சிறப்பான ராணுவ ஒத்துழைப்பை அவா் முன்னெடுத்துச் செல்வதுடன், பாதுகாப்பு பிரச்னைகள் மீதான தனது கருத்தையும் பகிா்ந்து கொள்வாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, பாதுகாப்புத் துறையில் புதிய கூட்டமைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில், 10 ஆண்டுகால யுக்தியை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் இஸ்ரேலும் பணிக்குழுவை நியமிக்க கடந்த மாதம் ஒப்புக்கொண்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT