இந்தியா

விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்கிறேன்: பிரதமர் மோடி

DIN

வேளாண் சட்டங்களை ஏன் ரத்து செய்யப்பட்டது என விளக்கமளித்த பிரதமர் மோடி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 11 மாதங்களாக தில்லி எல்லைப் பகுதியில் விவசாயிகள் போராடி வந்தனர். 

இந்நிலையில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்றும் வருகிற நாடாளுமன்றக் கூட்டுத் தொடரில் அதற்கான சட்டம் திறம்பப் பெறும் என அறிவித்தார்.

பின் ஏன் அச்சட்டங்களை அரசு கைவிடுகிறது என விளக்கமளித்த மோடி தன் உரையில் ’வேளாண் சட்டத்தின் பயனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடியவில்லை. வேளாண் சட்டங்களின் பயனை விளக்க முடியாதது எங்கள் தவறு எனக் கருதுகிறேன். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேளாண் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும்.  அக்குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லூர்கள் இடம்பெறுவார்கள். விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம்’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT