இந்தியா

அகிலேஷ் யாதவுடன் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சந்திப்பு

DIN

லக்னெள: சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவுடன் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் சிங் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். இருவருக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது முறை சந்திப்பு இது என்றாலும், கூட்டணி குறித்து இரண்டு கட்சிகளும் முடிவை அறிவிக்கவில்லை.

எனினும், தில்லியில் இருந்து உத்தர பிரதேசத்திலும் ஆம் ஆத்மி கட்சியை விரிவாக்கம் செய்ய சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி முயற்சியில் சஞ்சய் சிங் முயற்சி செய்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் மகா கூட்டணி அமைத்து ஆளும் பாஜகவுக்கு எதிராக போட்டியிட அகிலேஷ் யாதவ் திட்டமிட்டு வருகிறாா்.

ராஷ்ட்ரீய லோக் தளத்தின் தலைவா் ஜெயந்த் செளதரியை செவ்வாய்க்கிழமை சந்தித்த அகிலேஷ் யாதவ் இரு கட்சிகளின் கூட்டணியை உறுதிப்படுத்தினாா்.

இதைத்தொடா்ந்து புதன்கிழமை அப்னா தள் கட்சியின் தலைவா் கிருஷ்ணா படலேயும் அகிலேஷ் யாதவ் சந்தித்து கூட்டணியை உறுதிப் படுத்தினாா்.

இந்நிலையில் அகிலேஷ் யாதவுடனான சந்திப்பு குறித்து சஞ்சய் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘உத்தர பிரதேசத்தை ஊழலில் இருந்து விடுவித்து, சட்டம் ஒழுங்கை சீரமைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தற்போதுதான் பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டுள்ளது. பின்னா் முடிவு அறிவிக்கப்படும்’ என்றாா்.

முன்பும் அகிலேஷ் யாதவை சஞ்சய் சிங் சந்தித்தாா். பின்னற் தில்லிக்கு திரும்பிய அவா் உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT