பிரதமர் மோடி 
இந்தியா

இந்தியர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலம் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குகிறார்கள்: பிரதமர் மோடி

இந்தியாவில் 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பை கொண்ட 70க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன என மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

DIN

ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்திவருகிறார்

அந்த வகையில் இன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய மோடி, "ஜலானில் நூன் நதி என்று ஒரு நதி இருந்தது. படிப்படியாக, நதி அழிவின் விளிம்பிற்கு வந்தது. இது அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நெருக்கடியை உருவாக்கியது. 

ஜலான் மக்கள் இந்த ஆண்டு ஒரு குழுவை அமைத்து நதியை மீட்டெடுத்தனர். இது 'அனைவரின் ஆதரவு இருந்தால் அனைவருக்குமான வளர்ச்சியை அடையலாம்' என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இன்று, இந்தியாவில் 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பை கொண்ட 70க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. பல இந்தியர்கள் தங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலம் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வுகளை வழங்குகிறார்கள்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT