இந்தியா

அக்டோபர் இறுதியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்?

DIN


அக்டோபர் இறுதியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கூடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி தகவலறிந்த காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியது:

"காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என சோனியா காந்தி ஏற்கெனவே குறிப்பிட்டுவிட்டார். கூட்டத்தில் உள்கட்சி விவகாரங்கள் குறித்து பேசப்படும் என அறிவித்துள்ளார். இந்த மாத இறுதியில் கூட்டம் கூட்டப்படலாம்."

பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட ஜி23 தலைவர்கள் குரல் எழுப்பினர். இதுபற்றி சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் கடிதமும் எழுதினார்.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்குள் முடிவடைய வாய்ப்பு

தொழிலாளி தற்கொலை

மக்களவைத் தோ்தல்: ஈரோடு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை

கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

வைகாசி மாத அமாவாசை: சதுரகிரி வருவதை தவிா்க்குமாறு பக்தா்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT