இந்தியா

லக்கீம்பூர் விவகாரம்: மத்திய அமைச்சரின் மகனுக்கு 2வது முறையாக சம்மன்

DIN

லக்கிம்பூர் சம்பவத்தில் விசாரணைக்கு ஆஜராக கோரி மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷீஷ் மிஸ்ராவுக்கு இரண்டாவது முறையாக உத்தரப் பிரதேச காவல்துறை வெள்ளிக்கிழமை சம்மன் அளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இந்த பிரச்னை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் மீது ஏற்றிய காரில் மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவரின் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஷிஷ் மிஸ்ராவை அக்.8 காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக கோரி நேற்று மாலை முதல்முறையாக சம்மன் வழங்கியதுடன் அஜித் மிஸ்ராவின் வீட்டிற்கு வெளியே நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இன்று பிற்பகல் வரை ஆஷிஷ் விசாரணைக்கு ஆஜராகாததையடுத்து, அக்டோபர் 9 காலை 11 மணிக்கு ஆஜராகக்கோரி இரண்டாவது முறையாக மத்திய அமைச்சரின் வீட்டின் வெளியே நோட்டீஸை உ.பி. காவல்துறையினர் வெள்ளிக்கிழமை ஒட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT