முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 29 பேருக்கு கரோனா

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 58,989 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 29 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.05 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 58 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளார். அக்டோபர் மாதத்தில் நிகழும் முதல் கரோனா பலி இது.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,195 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,13,759 பேர் குணமடைந்துள்ளனர். 25,089 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 347 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 1,54,320 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டன. இதுவரை மொத்தம் 1,90,12,077 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.