இந்தியா

முகக்கவசம் கட்டாயம்: தென்றல் காற்றிலும் கரோனா பரவுமா?

DIN


புதுதில்லி: தென்றல் காற்றிலும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால் எங்குச் சென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து சென்றால் தொற்று பரவலை தடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

கரோனா நோய்த்தொற்று அமைதியான சூழ்நிலையை விட, காற்று வீசும்போது ​​ வேகமாகவும் நீண்ட தூரத்திற்கு பயணித்து பரவும் என்று இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு கணினி மாதிரி மூலம் காற்று மூலம் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கிறது என்பது ஒரு ஆய்வு நிரூபித்துள்ளது. 

இந்த நிலையில் மும்பை இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள்(ஐ.ஐ.டி), கரோனா நோய்த்தொற்று பரவல் குறித்த ஒரு ஆராய்ச்சி நடத்தி உள்ளனர். இதில் இருமல் இருக்கும் ஒருவர் வீட்டை விட்டு வெளியே வரும்போது, இருமல் வந்து இருமும்போது அதே திசையில் மெல்லிய தென்றல் காற்று வீசினால் அது 6 அடி தூரத்துக்கு அப்பால் வேகமாக பரவி கரோனா தொற்று பரவலை அதிகரிக்கலாம். 

மேலும் தொற்று நோய்க்கிருமிகளைக் கொண்ட சிறிய துளி வைரஸ் துகள்கள் காற்றில் நீண்ட காலம் வாழக்கூடியவை மற்றும் நீண்ட தூரம் பயணிக்கக்கூடியவை என்பது ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அதாவது இருமலின் வலிமையைப் பொறுத்து சுமார் 5 மைல் வேகத்தில் ஒரு லேசான காற்றில் கூட 3-6 அடி முதல் 3.6 - 7.2 அடி வரை பயணித்து 20 சதவிகிதம் வரை தொற்று பரவலை ஏற்படுத்துகிறது.

9-11 மைல் வேகத்திலான காற்றில் செல்லும் வைரஸ் துகள்களால் அதிகயளவில் தொற்று பரவல் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இதுபற்றி ஆராய்ச்சியாளரும், இணை ஆசிரியருமான அமித் அகர்வால் கூறும்போது, “எங்கள் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், இருமல் இருக்கும் ஒருவர் வீட்டை விட்டு வெளியே வரும்போது, இருமும்போது அது காற்றின் அதே திசையில் சென்று இருமலை அதிகரித்து தொற்று பரவும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது." எனவே வீட்டுக்கு வெளியே வந்தாலே கட்டாயம் முகக்கவசங்கள் அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சில்லென்று காற்று வீசுகிற சூழலில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணிந்தால் மட்டுமே கரோனா தொற்று பரவலை தடுக்க முடியும்.” 

மேலும் முழங்கையில் இருமுவதும் அல்லது முகத்தை திருப்பிக்கொண்டு இருமுவதும் வெளியே கரோனா தொற்றும் பரவுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT