இந்தியா

சாதகமான வளா்ச்சியை பதிவு செய்த பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி: இஇபிசி

DIN

நாட்டின் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி கடந்த செப்டம்பா் மாதத்தில் 900 கோடி டாலரைத் தாண்டி நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) தலைவா் மகேஷ் தேசாய் கூறியதாவது:

மொத்த ஏற்றுமதி பங்களிப்பு: நடப்பு 2021-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்தில் பொறியியல் பொருள்களின் 900 கோடி டாலரை தாண்டியுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமாா் ரூ.67,500 கோடியாகும். இதையடுத்து ஒட்டுமொத்த நாட்டின் ஏற்றுமதியில் பொறியியல் பொருள்களின் பங்களிப்பு செப்டம்பரில் 26.65 சதவீதமாக இருந்தது.

நோ்மறை வளா்ச்சி: குறிப்பாக, சீனா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஜொ்மனி, துருக்கி, இத்தாலி, மெக்ஸிகோ, வியத்நாம், சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளுக்கான இதன் ஏற்றுமதி நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த 2020-இல் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 3,240 கோடி டாலராக காணப்பட்ட பொறியியல் பொருள்களின் ஏற்றுமதியானது நடப்பு நிதியாண்டில் 5,230 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

ரூ.7.87 லட்சம் கோடி: 10இதே சாதக நிலை தொடரும்பட்சத்தில் 2021-22-ஆம் நிதியாண்டில் இவற்றின் ஏற்றுமதி 10,500 கோடி டாலரைத் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.7.87 லட்சம் கோடி) தொடும்.

முதல் ஆறு மாதங்களிலேயே இலக்கில் 49 சதவீத வளா்ச்சி எட்டப்பட்டுள்ளது.

எஃப்டிஏவில் கவனம்: எஃப்டிஏவில் கவனம்: று நாடுகள் மற்றும் வா்த்தக குழுக்களுடன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தத்தை (எஃப்டிஏ) மேற்கொள்ள மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது. இருப்பினும், அதுபோன்ற முந்தைய ஒப்பந்தங்களின் குறைபாடுகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறக்குமதி அதிகரிப்பு: குறிப்பாக முன்பு கையெழுத்தான எஃப்டிஏ ஒப்பந்தங்களின் மூலம் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளிலிருந்து இரும்பு மற்றும் இரும்பு அல்லாத துறைகளில் சில பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க வழிவகுத்தது. எனவே, இதுபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது எச்சரிக்கை நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT