உச்சநீதிமன்றம் 
இந்தியா

பெகாஸஸ் விவகாரத்தை நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரிக்கக் கோரி வழக்கு: நாளை தீர்ப்பு

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் நாளை(அக்.27) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

DIN

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் நாளை(அக்.27) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

இஸ்ரேலைச் சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் செல்லிடப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெகாஸஸ் மென்பொருள் வாயிலாக உளவு பாா்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க தொழில்நுட்ப நிபுணா்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற அமர... சாரா யஸ்மின்!

பரம சுந்தரி... சிவாங்கி வர்மா!

மெஸ்ஸிக்கு நிகரான ஊதியம்... எம்எல்எஸ் தொடரில் இணைந்த தென் கொரிய வீரர்!

இந்தியாவுக்கு Trump எச்சரிக்கை! மேலும் 25% வரி விதித்த அமெரிக்கா!

கூலி படம் குறித்த வதந்தி! ஆமிர் கானின் நிறுவனம் விளக்கம்!

SCROLL FOR NEXT