இந்தியா

உ.பி.யில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. 

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. 

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் உரம் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு 4 விவசாயிகள் உயிரிழந்தனர். பல தினங்களாக விவசாயிகள் வரிசையில் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, லலித்பூர் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

உத்தரப் பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதி முழுவதும் கடுமையான உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகவும் பிரியங்கா காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது. 

முன்னதாக, லலித்பூர் செல்லும்வழியில் ரயில்வே கூலித் தொழிலாளர்களை சந்தித்து பிரியங்கா காந்தி கலந்துரையாடினார். கரோனா பொதுமுடக்கத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT