இந்தியா

அதிக அளவில் சரக்குகளை ஏற்றிச் சென்று ரயில்வே சாதனை

DIN

புது தில்லி: கரோனா சவால்களுக்கு இடையிலும், இந்திய ரயில்வே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவிலான சரக்குகளை ஏற்றி, அதிக வருவாயை ஈட்டியுள்ளது.

கடந்த மாதத்தில் இந்திய ரயில்வே 110.55 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் சென்றது. இது கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளுடன் ஒப்பிடுகையில் (94.59 மில்லியன் டன்கள்) 16.87 சதவீதம் அதிகம். இதன்மூலம் இந்திய ரயில்வேக்கு கிடைத்த வருவாய் ரூ. 10,866.20 கோடி. இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாத வருவாயைவிட (ரூ.9,043.44 கோடி) 20.16 சதவீதம் அதிகம்.

கடந்த மாதத்தில் 47.94 மில்லியன் டன் நிலக்கரி, 13.53 மில்லியன் டன் இரும்புத்தாது, 5.77 மில்லியன் டன் எஃகு, 6.88 மில்லியன் டன் உணவு தானியங்கள், 4.16 மில்லியன் டன் உரம், 3.60 மில்லியன் டன் கனிம எண்ணெய், 6.3 மில்லியன் டன் சிமென்ட், 4.51 மில்லியன் டன் மரக்கரி உள்ளிட்ட பல பொருள்களை ரயில்வே கையாண்டுள்ளது.

ரயில் சரக்கு போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரிக்க, ஏராளமான கட்டண சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அளிக்கப்படுகின்றன. சரக்கு ரயில்களின் வேகமும், கடந்த 19 மாதங்களில் இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தனது ஒட்டுமொத்த திறன்கள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த கரோனா காலத்தை, ஒரு வாய்ப்பாக இந்திய ரயில்வே பயன்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

SCROLL FOR NEXT