இந்தியா

உ.பி.யில் குறையும் கரோனா: 24 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் இல்லை

DIN


உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 24 மாவட்டங்களில் புதிய கரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை என அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது:

"கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 12 மாவட்டங்களிலிருந்து 26 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் தற்போது கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 250 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் 0.01 சதவிகிதமாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக குணமடைவோர் விகிதம் 98.7 சதவிகிதம்.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்."
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT