இந்தியா

சீனாவின் மோசடி எதிரொலி! முதலீடு செய்ய வாய்ப்புள்ள நாடுகளின் தரவரிசை அறிக்கையை நிறுத்த உலக வங்கி முடிவு

DIN

சீனாவின் மோசடி காரணமாக முதலீடு செய்ய வாய்ப்புள்ள நாடுகளின் தரவரிசை அறிக்கையை வெளியிடுவதை நிறுத்துவது என உலக வங்கி முடிவு செய்துள்ளது.

முதலீடு செய்ய அதிக வாய்ப்புள்ள நாடுகளின் தரவரிசை பட்டியலை உலக வங்கி ஆண்டுதோறும் தயாரித்து வெளியிட்டு வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டில் சீனாவின் தரவரிசையை உயா்த்த உயா்நிலை வங்கி அதிகாரிகள் சிலா் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தரவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டைத் தொடா்ந்து உலக வங்கி அந்த தரவரிசை அறிக்கையை நிறுத்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

உலக வங்கியின் இந்த முடிவு, பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு தளத்தை இந்தியாவை நோக்கி மாற்றுவதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என அரசு வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளன.

உலக வங்கி கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிட்ட முதலீடு செய்ய வாய்ப்புள்ள தரவரிசைப் பட்டியலில் இந்தியா 64-ஆவது இடத்திலிருந்து 14-ஆவது இடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT