இந்தியா

1 கோடி அமைப்புசாரா தொழிலாளா்கள் மத்திய அரசின் வலைதளத்தில் பதிவு

DIN

அமைப்புசாரா தொழிலாளா்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோா் மத்திய அரசின் வலைதளத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனா்.

அமைப்புசாரா தொழிலாளா்கள் இ-ஷ்ரம் (eshram.gov.in) என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கை கடந்த ஆக. 26-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வலைதளத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 24 நாள்களில் 1,03,12,095 போ் இந்த வலைதளத்தில் பதிவு செய்துள்ளனா். இவா்களில் 43 சதவீத பயனாளிகள் பெண்கள், 57 சதவீதம் போ் ஆண்கள்.

மணிப்பூா் மாநிலம் இம்பாலில் உள்ள பதிவு மையத்தில் மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவும், மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள பதிவு மையத்தில் இணையமைச்சா் ராமேஷ்வா் தெலியும் அமைப்புசாராத் தொழிலாளா்களுடன் கலந்துரையாடி இ-ஷ்ரம் அட்டைகளை வழங்கினா்.

சமீபத்திய தரவுகளின்படி பிகாா், ஒடிஸா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT