இந்தியா

ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கிய பள்ளி மாணவர் கைது

ANI

தில்லியில் ஆசிரியை இரும்பு கம்பியால் தாக்கிய பள்ளி மாணவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.

தில்லி பாப்ரோலா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விக்ராந்த் சிங். இவர் கடந்த சனிக்கிழமை ஆசிரியர் அறையில் அமர்ந்திருந்தார்.

அங்கு வந்த 11ஆம் வகுப்பு மாணவர்(வயது 21), ஆசிரியர் விக்ராந்தை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். உடனடியாக விக்ராந்தை மீட்ட சக ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த ரன்ஹோலா காவல் நிலைய அதிகாரிகள் மாணவரை கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT