இந்தியா

முழு அடைப்பு போராட்டம்: கேரளத்தில் ஆளும் - எதிர்க்கட்சிகள் ஆதரவு

ANI

நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கேரளத்தில் ஆளுங்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தில்லியில் தொடா்போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் திங்கள்கிழமை (செப்.27) முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ. கூட்டணிகள் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிகள் என பெரும்பாலான கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனால் மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும், கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT