ரயிலில் வரும் பார்சலை வீடு வீடாக அனுப்பவிருக்கும் ரயில்வே 
இந்தியா

அடடா! ரயிலில் வரும் பார்சலை வீடு வீடாக அனுப்பவிருக்கும் ரயில்வே

இந்திய அஞ்சல் துறையும் மற்றும் இந்திய ரயில்வேயும் இணைந்து மேம்படுத்தப்பட்ட பார்சல் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. 

DIN


புது தில்லி: இந்திய அஞ்சல் துறையும் மற்றும் இந்திய ரயில்வேயும் இணைந்து மேம்படுத்தப்பட்ட பார்சல் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. 

பார்சலை வாங்கும் இடத்திலும், பார்சலை கொடுக்கும் இடத்திலும் அஞ்சல்துறை சேவை செய்யும். இந்த பார்சலை ரயில் நிலையங்களுக்கிடையே கொண்டு செல்லும் சேவையை ரயில்வே செய்யும். இந்த திட்டத்தின் நோக்கம் வணிகர்களிடமிருந்து வணிகர்களுக்கு மற்றும் வணிகர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு என்பதாகும். 

அதாவது அனுப்புகின்றவரின் இடத்தில் இருந்து, கொண்டுசென்று பெறுகின்றவரின் இடத்தில் அளிப்பதாகும்.

முன்னோட்ட அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் சேவை 2022 மார்ச் 31-ல் சூரத்- வாரணாசி இடையே நடைபெற்றது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதனை தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு!

டிவிஎஸ் அப்பாச்சி 20-ஆம் ஆண்டு விழா எடிசன்!

ஆஸி. மகளிரணியின் வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வி!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல் அதிகரிக்கும்: அமித் ஷா எச்சரிக்கை!

2 பாகங்களாக உருவாகும் சிம்பு - வெற்றி மாறன் திரைப்படம்!

SCROLL FOR NEXT