இந்தியா

ஆம் ஆத்மியில் இணைகிறார் ஹரியாணா முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் சிங்

ஹரியாணா மாநிலத்தில் அமைச்சராக இருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் சிங், இன்று பிற்பகல் தேசிய தலைநகரில் ஆம் ஆத்மி கட்சியில் இணைய உள்ளார். 

DIN

ஹரியாணா மாநிலத்தில் அமைச்சராக இருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் சிங், இன்று பிற்பகல் தேசிய தலைநகரில் ஆம் ஆத்மி கட்சியில் இணைய உள்ளார். 

ஆம் ஆத்மி கட்சியில் இணைவதற்கு முன்பு கேஜரிவாலை, அவரது மகள் சித்ரா சர்வாராவுடன் அவரது இல்லத்தில் நிர்மல் சிங் சந்திக்கிறார். 

ஆம் ஆத்மி தலைமையகத்தில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் செய்தியாளர் சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக இருப்பார்.

சிங் ஹரியாணா அரசில் இரண்டு முறை அமைச்சராகவும் இருந்தார். நான்கு முறை எம்எல்ஏவாக இருந்தவர். கடந்த 1982, 1991, 1996 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் நாக்கல் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

சமீபத்தில் பஞ்சாபில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கட்சியில் சேரும் தலைவர்கள் அதிகரித்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி ஹரியாணா, இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்ய உள்ளது.

முன்னதாக, ஹரியாணா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அசோக் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT