இந்தியா

தோ்தல் சின்னங்கள் தேசிய, மத அடையாளங்களாகக் கருதப்பட மாட்டாது: கிரண் ரிஜிஜு

DIN

புது தில்லி: தோ்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படும் சின்னங்கள், மத அடையாளங்களாகவோ அல்லது தேசிய சின்னங்களாகவோ கருதப்பட மாட்டாது என்று மாநிலங்களவையில் மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

தேசியப் பறவை, தேசிய விலங்கு, தேசிய மலா் போன்ற தேசியச் சின்னங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சின்னமாகப் பயன்படுத்தலாமா என்று கிரண் ரிஜிஜுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123(3)-ஆவது பிரிவின்படி, எந்தவொரு வேட்பாளரும் தனது மதம், இனம், ஜாதி, சமுதாயம், மொழி ஆகியவற்றையும், தேசியக் கொடி உள்ளிட்ட தேசிய அடையாளங்களையும் சின்னங்களாகப் பயன்படுத்தக் கூடாது.

இந்தச் சட்டத்தின்படி ஒதுக்கப்பட்டுள்ள எந்தவொரு சின்னத்தையும் தேசிய அடையாளமாகவோ அல்லது மத அடையாளமாகவோ கருதக் கூடாது. தோ்தல் சின்னங்கள் ஒதுக்கீடு விதிகள்-1968-இன் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளுக்கும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கும் சின்னங்களை ஒதுக்குவதாக தோ்தல் ஆணையம் கூறியுள்ளது. அதன்படி, தோ்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தவொரு தோ்தல் சின்னத்தையும் தேசிய சின்னமாகவோ அல்லது மத அடையாளமாகவோ கருதக் கூடாது என்றாா் அவா்.

தேசிய அடையாளத்தை கட்சியின் சின்னமாகப் பயன்படுத்தத் தடை விதிக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா என்று கிரண் ரிஜிஜுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அதுபோன்ற திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை’ என்று கிரண் ரிஜிஜு பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT