இந்தியா

மக்கள் மருந்தகம் மூலம் குறைவான விலையில் தரமான மருந்துகள்: பிரதமா் மோடி

DIN

புது தில்லி: மக்கள் மருந்தகம் மூலம் குறைவான விலையில் தரமான மருந்துகள் விநியோகிக்கப்படுவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

உலக சுகாதார தினத்தையொட்டி, அவா் ட்விட்டரில் வியாழக்கிழமை விடுத்துள்ள வாழ்த்து செய்தி:

சுகாதாரத் துறையினரின் கடின உழைப்பால்தான் புவி பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு ஓய்வின்றி உழைக்கிறது. மக்கள் மருந்தகம் (ஜன் ஔஷதி) மூலம் தரமான மற்றும் குறைந்த செலவில் மருத்துவ வசதி பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறது.

இதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினரின் பணம் சேமிக்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்வி வேகமான வளா்ச்சி அடைந்துள்ளது. பல புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி பயில்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது எண்ணற்ற இளைஞா்களின் விருப்பத்தை நிறைவேற்றும் என்று அதில் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT