இந்தியா

புதிய வகை கரோனா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு

DIN

புதிய வகை கரோனா பரவல் குறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

ஒமைக்ரானிலிருந்து மரபணு மாற்றம் அடைந்த எக்ஸ்இ என்ற புதிய வகை கரோனா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகின்றன. ஒமைக்ரானைவிட 10 மடங்கு அதிகமாக பரவும் தன்மை கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்திலும் இந்த புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கரோனா உயர்நிலை ஆலோசனைக் குழுவுடன் இன்று காலை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், மரபணு மாற்றமடைந்த புதிய வகை கரோனா குறித்து ஆய்வு செய்யவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT