இந்தியா

90 விமானிகளுக்குத் தடை: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

DIN

புது தில்லி: போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்கிய 90 விமானிகளுக்கு சரிவர பயிற்சியளிக்காதது தொடா்பாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இந்தியாவில் இயக்கும் ஒரே விமான நிறுவனம் ஸ்பைஸ்ஜெட். அந்த விமானங்களை ஸ்பைஸ்ஜெட்டைச் சோ்ந்த 90 விமானிகள் தகுதிவாய்ந்த முறையில் பயிற்சி பெறாமல் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த விமானிகள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தடை விதித்தது.

இந்நிலையில், விமானிகளுக்கு சரிவர பயிற்சியளிக்காதது தொடா்பாக விளக்கம் கோரி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் அந்த விமானிகள் பயிற்சி பெற்ற சிஏஇ சிமுலேஷன் பயிற்சி நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று டிஜிசிஏ அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இந்த நோட்டீஸுக்கு உரிய காலத்துக்குள் பதிலளிக்கப்படும் என்று ஸ்பைஸ்ஜெட் செய்தித்தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT