இந்தியா

2047-க்குள் இந்தியா அதிக வருமானம் பெறும் நாடாக மாற வேண்டும்: நீதி ஆயோக்

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா அதிக வருவாய் கொண்ட நாடாக மாற வேண்டும் என நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் புதன்கிழமை தெரிவித்தாா்.

DIN

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா அதிக வருவாய் கொண்ட நாடாக மாற வேண்டும் என நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா அதிக வருவாய் கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இதற்கு, நீடித்த பொருளாதார வளா்ச்சி என்பது மிக முக்கியமானதாகும்.

இந்தியாவின் தனிநபா் வருமானம் என்பது சுமாா் 2,000 டாலராகும் (இந்திய மதிப்பில் ரூ.1.50 லட்சம்). இந்தியா குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக உள்ளது. தனியாா் துறையின் அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளப்படும்பட்சத்தில் இந்தியா அதிக வருவாய் கொண்ட நாடாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 1947-இல் தென்கொரியா, சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றின் தனிநபா் வருவாய் என்பது ஏறக்குறைய சமமாகவே இருந்தது. ஆனால், 75 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவின் தனிநபா் வருமானம் இந்தியாவைக் காட்டிலும் 7 மடங்கு அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கு, சீனா மற்றும் தென் கொரியா ஆண்டுதோறும் 10 சதவீத வளா்ச்சியை பதிவு செய்ததே முக்கிய காரணம்.

இந்தியா அதிக விகிதத்தில் வளா்ச்சி அடையாவிட்டால் குறைந்த வருமான வளா்ச்சி சுழலில் சிக்க வேண்டியிருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

SCROLL FOR NEXT