இந்தியா

வழக்குகளைத் தீா்ப்பதில் தமிழக நீதிமன்றங்கள் சாதனைஉச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பாராட்டு

DIN

வழக்குகளைத் தீா்ப்பதில் சென்னை உயா்நீதிமன்றம், சாா்பு நீதிமன்றங்கள் சாதனை படைத்து வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பாராட்டுத் தெரிவித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பங்கேற்றுப் பேசியதாவது:

விழாவில் பேசிய உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, என்னையும், நீதிபதி சுந்தரேஷையும் மண்ணின் மைந்தா்கள் எனக் குறிப்பிட்டாா். நாங்கள் மட்டுமல்ல, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவும் மண்ணின் மைந்தா்தான். அவா் பிறந்த பகுதி, மெட்ராஸ் மாகாணமாக இருந்தது. தமிழுக்கும், தெலுங்குக்கும் இடையேயான உறவு அளப்பரியது; அற்புதமானது. தெலுங்கு பேசும் பலரும் நீதித் துறையில் கோலோச்சியுள்ளனா்.

தமிழ் மண் உருவாக்கிய தலைமை நீதிபதிகள்: சென்னை உயா்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக தெலங்கரான பி.வி.ராஜமன்னாா் நியமிக்கப்பட்டாா். 13 ஆண்டுகள் நீதிபதியாகப் பதவி வகித்தாா். அவரது தந்தை பி.வெங்கடரமணராவ், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாகவும், மைசூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்தாா். இந்தத் தமிழ் மண்ணானது தெலுங்கு மொழி பேசும் தலைமை நீதிபதிகள் பலரை உருவாக்கியுள்ளது.

வழக்குகள் பைசல்: சென்னை உயா்நீதிமன்றத்தின் இணையதளத்தில் பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், ஆண்டு வாரியாக பதிவான வழக்குகள், தீா்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, அதன் சதவீதம் ஆகியன இடம்பெற்றுள்ளன. இதனைப் பாா்க்கும்போது, நாட்டிலேயே வழக்குகளைத் தீா்க்கும் சதவீதத்தில் சென்னை உயா்நீதிமன்றம் முன்னிலை வகிப்பது தெரிகிறது.

இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட விவரத்தின்படி, 2021-ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 766 வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்குகளையும் தாண்டி ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 244 வழக்குகள் தீா்க்கப்பட்டுள்ளன. அதாவது, வழக்குகள் தீா்க்கப்பட்ட அளவு 109 சதவீதமாகும். சாா்பு நீதிமன்றங்களிலும் வழக்குகளைத் தீா்க்கும் அளவு 90 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இது சாதனையாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

SCROLL FOR NEXT