இந்தியா

பத்மஸ்ரீ விருது பெற்ற 90 வயது கலைஞருக்கே இந்த நிலையா? அரசு வழங்கிய இடத்தை காலி செய்ய உத்தரவு

DIN

அரசு வழங்கிய இடத்தை காலி செய்யுமாறு மத்திய அரசு எட்டு கலைஞர்களுக்கு புதன்கிழமையன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு வசித்து கொள்வதற்கு ஏதுவாக கலைஞர்களுக்கு அப்போதைய மத்திய அரசு வழங்கியிருந்தது. இந்த ஆணையை 2014ஆம் ஆட்சி பொறுப்பேற்ற மத்திய அரசு ரத்து செய்தது. 

பத்ம ஸ்ரீ வருது பெற்ற 90 வயது ஒடிஷா நடன கலைஞரான குரு மைதாரி ராவத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அரசு வழங்கிய இடத்தை மே 2ஆம் தேதிக்குள் மற்ற எட்டு கலைஞர்கள் காலி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலர் கூறுகையில், "28 கலைஞர்களில் இன்னும் 8 பேர் பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகும் அரசு இடத்தை காலி செய்யவில்லை. பங்களாக்களை காலி செய்யும் பணிகள் நடைபெற்ற வருவதாக எட்டு கலைஞர்கள் உறுதி அளித்துள்ளனர். 

அவர்கள் சில நாள்கள் அவகாசம் கேட்டுள்ளனர். மே 2ஆம் தேதிக்குள் காலி செய்துவிடுவோம் அவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். அதுவரை அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளோம்" என்றார்.

குரு மைதாரி ராவத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்த அவர், "வீட்டை விட்டு காலி செய்யும் வகையில் அவரின் பங்களாவுக்கு குழு அனுப்பப்பட்டுள்ளது" என்றார். அவரின் வீட்டு உபகரணங்கள் பங்களாவுக்கு வெளியே வைக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

20,000 ரூபாய்க்கும் குறைவாக மாத சம்பளம் பெறும் பட்சத்தில் மத்திய அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் 40 கலைஞர்களுக்கு கலாசார அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தங்குவதற்கு வீடு வழங்கலாம். 

தேசிய தலைநகரில் உள்ள வீடுகளை கலைஞர்கள் ஏப்ரல் இறுதிக்குள் காலி செய்ய வேண்டும் என தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக, கால அவகாசம் வழங்கக் கோரி இந்திய பாரம்பரிய கலைஞர் ரீட்டா கங்குலி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த கோரிக்கையையும் தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT