இந்தியா

தில்லியில் மேலும் 1,490 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை 1,490 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 2 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 4.62 சதவீதமாக உள்ளது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் தொடா்ந்து 7-ஆவது நாளாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,79,948-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,172-ஆக அதிகரித்துள்ளது.

நகரில் புதன்கிழமை 32,248 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. புதன்கிழமை 1,136 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. நோ்மறை விகிதம் 4.50 சதவீதமாகப் பதிவானது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT