இந்தியா

வரலாற்று வெற்றி: இந்திய மகளிருக்கு மோடி வாழ்த்து

DIN

இங்கிலாந்து தலைநகர் பர்மிங்ஹாமில் இந்திய மகளிர் வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

காமன்வெல்த் போட்டியில், லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை 17 - 10 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், தங்கப் பதக்கம் வென்ற மகளிருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், பர்மிங்ஹாமில் வரலாற்று வெற்றி. செளபே, பிங்கி சிங், நயான்மோனி சைகா மற்றும் ரூபா ராணி ஆகியோர் லான் பவுல்ஸ் விளையாட்டில் மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தந்துள்ளனர்.

மகளிர் அணி தங்களது திறமையை நிரூபித்துள்ளது. அவர்களுடைய இந்த வெற்றி ஏராளமான இந்தியர்களை லான் பவுல்ஸை நோக்கி நகர ஊக்கப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT